என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மாவோயிஸ்ட் தாக்குதல்"
சத்தீஸ்கர் மாநிலத்தில் வன்முறை தாக்குதல்கள் மற்றும் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் மாவோயிஸ்டுகளை ஒடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மாவோயிஸ்டுகள் பதுங்கியிருக்கும் வனப்பகுதிகளில், உள்ளூர் போலீசாருடன் சிறப்பு அதிரடிப்படை மற்றும் மாவட்ட ரிசர்வ் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், ஏராளமான மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளனர்.
அதேசமயம் பயங்கரவாதப் பாதையில் இருந்து திரும்பி திருந்தி வாழ விரும்பும் மாவோயிஸ்டுகளுக்கு, புனர்வாழ்வு பணிகளுக்கான ஏற்பாடுகளையும் அரசு செய்து கொடுக்கிறது. மாவோயிஸ்டுகள் ஆயுதங்களை ஒப்படைத்து சரண் அடைந்தால் அவர்கள் திருந்தி வாழ வாய்ப்பு வழங்கப்படும் என்று காவல்துறை தொடர்ந்து அறிவிப்பு வெளியிட்டு வருகிறது. அதனை ஏற்று ஏராளமான மாவோயிஸ்டுகள் குடும்பத்தினருடன் சரண் அடைந்தவண்ணம் உள்ளனர். அவர்கள் திருந்தி வாழ அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இதுபற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு அபிஷேக் பல்லவா கூறுகையில், “மாவட்ட ரிசர்வ் படைக்கு உள்ளூர் இளைஞர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். சரண் அடைந்த மாவோயிஸ்டுகளுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தற்போது உருவாக்கப்பட்டுள்ள 30 பேர் பெண் கமாண்டோ படையில், சரண் அடைந்த 10 மாவோயிஸ்டுகள் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், மாவோயிஸ்டுக்கு எதிரான கிளர்ச்சி இயக்கத்தில் இருந்த 10 பெண்கள் உதவி கான்ஸ்டபிள்களாக இணைந்துள்ளனர். மாவோயிஸ்டுகளுக்கு எதிரான இன்றைய நடவடிக்கையிலும் பெண் கமாண்டோ படை இடம்பெற்றிருந்தது” என்றார்.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும், 3 மாவோயிஸ்டு கமாண்டர்களை இந்த பெண் கமாண்டோக்கள் சுட்டுக்கொன்றிருப்பதாக மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். #Chhattisgarh #WomenCommandoUnit #SurrenderedMaoists
சத்தீஸ்கர் மாநிலத்தில் வன்முறை தாக்குதல்கள் மற்றும் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் மாவோயிஸ்டுகளை ஒடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மாவோயிஸ்டுகள் பதுங்கியிருக்கும் பகுதிகளில், உள்ளூர் போலீசாருடன் சிறப்பு அதிரடிப்படை மற்றும் மாவட்ட ரிசர்வ் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், ஏராளமான மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த தண்டேவாடா மாவட்டம் கொண்டராஸ் வனப்பகுதியில் இன்று அதிகாலை 5 மணியளவில் சிறப்பு அதிரடிப்படை மற்றும் மாவட்ட ரிசர்வ் படை வீரர்கள் ரோந்து சென்றனர். அப்போது, அவர்களை நோக்கி மாவோயிஸ்டுகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர்.
இரு தரப்பினருக்குமிடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில், 2 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. சண்டை நடந்த இடத்தில் இருந்து துப்பாக்கிகள், வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
மாவோயிஸ்டுகளுக்கு எதிரான இன்றைய தேடுதல் வேட்டையில், மாவட்ட ரிசர்வ் படையின் பெண் கமாண்டோக்களும் இடம்பெற்றிருந்ததாக மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு அபிஷேக் பல்லவா தெரிவித்தார். இந்த கமாண்டோபடையில், சரண் அடைந்த பெண் மாவோயிஸ்டுகள், சரண் அடைந்த மாவோயிஸ்டுகளின் மனைவிகள் என 30 பெண்கள் இடம்பெற்றிருந்ததாகவும் அவர் கூறினார். #Chhattisgarh #NaxalsKilled
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் 3 மாநில எல்லையில் அமைந்துள்ளது. 16 எல்லையோர சோதனை சாவடிகள் உள்ளன. நாளை பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு அனைத்து சோதனை சாவடிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவின் மலப்புரம், வயநாடு, பாலக்காடு மற்றும் கர்நாடகாவின் சாம்ராஜ் நகர் ஆகிய பகுதிகள் நீலகிரி மாவட்டத்தின் எல்லையோரத்தில் அமைந்துள்ளன.
நீலகிரி மாவட்டத்தின் எல்லையோரத்தில் அமைந்துள்ள பகுதிகளில் மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் உள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள மக்கள் குறிப்பாக பழங்குடியின மக்கள் தைரியமாக வாக்களிக்க வேண்டும் என்ற நம்பிக்கையை உருவாக்கும் வகையிலும், தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என யாரேனும் மக்களை அணுகிடுவதை தவிர்க்கும் வகையிலும், எக்காரணத்தை கொண்டும் தேர்தலை புறக்கணிக்க கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக அதிரடிபடையினர் மற்றும் நக்சல் தடுப்பு பிரிவினர் பழங்குடியினர் கிராமங்கள் உள்ளிட்ட அனைத்து கிராமங்களுக்கும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
கேரளாவில் ஜலீல் என்ற மாவோயிஸ்டு சுட்டுக் கொல்லப்பட்டதும் மாவோயிஸ்டுகள் தேர்தலை புறக்கணிக்க கோரி பல இடங்களில் போஸ்டர்கள் ஓட்டினார்கள். நீலகிரி மாவட்டத்துக்குள் அவர்கள் நுழைந்து மக்களை அச்சுறுத்த கூடாது என்பதற்காத 200 அதிரடிப்படையினர், நக்சல் தடுப்பு பிரிவில் 50 பேரும், கமாண்டோ பயிற்சி முடித்த 44 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
முக்கிய இடங்களில் அவர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 240 கி.மீ., தூரம் மாவட்ட எல்லை சீல் வைக்கப்பட்டு கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தேர்தல் பாதுகாப்பு பணிக்காக சி.ஆர்.பி.எப்., ஒரு கம்பெனி, தமிழ்நாடு சிறப்பு காவல் படை ஒரு கம்பெனியினர் வந்துள்ளனர்.
இது தவிர உள்ளூர் போலீசார் 1400 பேர் தேர்தல் பணியில் ஈடுபட்டு உள்ளனர். நீலகிரி தொகுதியை பொறுத்த வரை 78 பதட்டமான வாக்குசாவடிகள் உள்ளன. அங்கு சி.ஆர்.பி.எப்., படையினர் மற்றும் ஆயுதப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். #Maoist
மஞ்சூர்:
நீலகிரி மாவட்டத்தை ஒட்டிய கேரளா வனப்பகுதிகளில் மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் அதிகளவில் உள்ளது.
இதை தொடர்ந்து அம்மாநில போலீசார் மற்றும் வனத்துறையினர் மாவோயிஸ்டு தேடுதல் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். கேரளா போலீசாரின் தேடுதல் நடவடிக்கைகளால் மாவோயிஸ்டுகள் அங்கிருந்து தப்பி தமிழக பகுதிகளில் ஊடுருவக்கூடிய வாய்ப்புகள் உள்ளது.
இதையடுத்து தமிழக போலீசார் மற்றும் அதிரடி படையினர் தமிழக-கேரளா எல்லை பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் ஆந்திராவை சேர்ந்த தெலுங்குதேச எம்.எல்.ஏ சர்வேஸ்வரராவ், முன்னாள் எம்.எல்.ஏ சிவேரி சோமா ஆகியோரை சுட்டுக் கொன்றனர்.
மேலும் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களை ஒருங்கிணைத்து கொரில்லா ஆயுத போராட்டம் நடத்தப்போவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளனர். இந்நிலையில் ஆந்திர மாநில தெலுங்கு தேச எம்.எல்.ஏ சர்வேஸ்வரராவ், மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ சிவேரி சோமா ஆகியோரை சுட்டு கொன்றது சீனுபாபு என்கின்ற சுனில், அருணா என்ற வெங்கட்ரவி சைதன்யா, காமேஸ்வரி ஆகிய 3 பேர் என தெரிய வந்துள்ளது. இவர்களின் புகைப்படங்களை ஆந்திர போலீசார் வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து தமிழக போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதை தொடர்ந்து நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகபிரியா உத்தரவின் பேரில் நீலகிரி மாவட்டத்தில் தமிழக, கேரளா, கர்நாடகா மாநில எல்லையோர பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் நக்சல் தடுப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி. மோகன்நவாஸ் அறிவுறுத்தலின் பேரில் நக்சல் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி, தலைமை காவலர் சார்லஸ் ஆகியோர் மேற்பார்வையில் அதிரடி படையினர் 20-க்கும் மேற்பட்டோர் தமிழக கேரளா எல்லையை ஒட்டிய கேரிங்டன், கிண்ணக்கொரை, தனயகண்டி, இரியசீகை, முள்ளி, பெரும்பள்ளம், மானார் உள்ளிட்ட வனப்பகுதிகளில் தேடுதல் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபடும் நக்சல் தடுப்பு பிரிவு மற்றும் அதிரடி படை போலீசாருக்கு நவீன துப்பாக்கிகளுடன் புல்லட் புரூப் எனப்படும் குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளது. #Maoist
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்